சாலையில் தாறுமாறாக ஓடி வாய்க்காலில் பாய்ந்த லாரி

சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி வாய்க்காலில் பாய்ந்தது.
சாலையில் தாறுமாறாக ஓடி வாய்க்காலில் பாய்ந்த லாரி
Published on

கொள்ளிடம் டோல்கேட்:

நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று வந்தது. திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிளியநல்லூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் குறுக்கே தாறுமாறாக ஓடி அருக உள்ள அய்யன் வாய்க்கால் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு வாய்க்காலில் பாய்ந்தது. இதில் லாரியின் முன்பகுதி தண்ணீரில் மூழ்கியது.இந்த விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் சிறிய காயங்களுடன், தண்ணீரில் நீந்தி கரைசேர்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து டிரைவர், கிளீனரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com