பெண்ணை மிரட்டியவர் கைது

பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணை மிரட்டியவர் கைது
Published on

அம்பை:

மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வைராவிகுளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு பாப்பான்குளம் இந்திரா காலனியை சேர்ந்த பார்த்திபன் (வயது 21) என்பவர் வழிமறித்து அந்த பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய், மணிமுத்தாறு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பார்த்திபனை கைது செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com