ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம்! பத்திரிகையாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் கண்மூடித்தனமாக கருத்துக்களை உருவாக்க முயற்சிப்பது அல்ல என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
Published on: 

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் நாள் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, பத்திரிகையாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு பத்திரிகையாளரின் வேலை, பொது அறிவு மனப்பான்மையின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமாக கருத்துக்களை உருவாக்க முயற்சிப்பது அல்ல! சமூகத்தின் சிந்தனை முறை சீர்குலைவின் விளிம்பில் இருக்கும்போதும், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களுக்கு, அதை வடிவமைத்து செம்மைப்படுத்தும் முக்கியப் பணி உள்ளது.

தேசிய பத்திரிகை தினம்

அதனால்தான் மற்ற மூன்று தூண்களை விட ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நேர்மை, துணிவு, உண்மையை வெளிக்கொணரும் பேரார்வம், கடின உழைப்பு மற்றும் பொறுமையுடன் தங்கள் கடமைகளை ஆற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இனிய தேசிய பத்திரிகை தின வாழ்த்துக்கள் !

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X