மதுரையில் அம்மா உணவக பெயர் பலகை மீண்டும் மாற்றம்

மதுரையில் சர்ச்சையை ஏற்படுத்திய அம்மா உணவக பெயர் பலகையில் மீண்டும் ஜெயலலிதா படம் மட்டும் இடம் பெற்றுள்ளது.
மதுரையில் அம்மா உணவக பெயர் பலகை மீண்டும் மாற்றம்
Published on

மதுரை,

மதுரையில் சர்ச்சையை ஏற்படுத்திய அம்மா உணவக பெயர் பலகையில் மீண்டும் ஜெயலலிதா படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக, மதுரை சுந்தர்ராஜபுரத்தில் உள்ள அம்மா உணவக பெயர் பலகையில், ஜெயலலிதாவின் படத்துடன், கருணாநிதியின் படம் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகளால், பெயர் பலகை திடீரென அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களாக பெயர்ப்பலகை இன்றி செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில், மீண்டும் ஜெயலலிதாவின் படம் மட்டும் இடம்பெற்றவாறு பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com