ராமேசுவரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட குட்டி யானை

அசாம் மாநிலத்தில் இருந்து லாரி மூலம் சுமார் 10 நாட்கள் பயணம் செய்து ராமேஸ்வரத்தை வந்தடைந்தது.
குட்டி யானை
Published on: 

ராமேசுவரம்:

உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு, அசாம் மாநிலத்தில் இருந்து புதிதாக குட்டி ஆண் யானை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

‘சிவா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குட்டி யானை, அசாம் மாநிலத்தில் இருந்து லாரி மூலம் சுமார் 10 நாட்கள் பயணம் செய்து ராமேஸ்வரத்தை வந்தடைந்தது.

‘சிவா’ யானை

ராமநாதசுவாமி கோவிலில் ஏற்கனவே ‘ராமலட்சுமி’ என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக ‘சிவா’ யானை கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தினர் மற்றும் யானை பராமரிப்பாளர்கள் சிவா யானையை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். புதிய யானை கோவிலுக்கு வந்துள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com