மொபட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

திருச்செங்கோட்டில் மொபட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
மொபட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 80). ஆசாரி தொழில் செய்து வந்தார். நேற்று இவர் தனது மொபட்டில் வேலூர் ரோட்டில் உள்ள ரேஷன் கடைக்கு மண்எண்ணெய் வாங்க சென்றார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை அருகே செல்லும்போது வேகத்தடையை கடக்கும் போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com