தமிழ்நாட்டை ஐந்து ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீரழித்துள்ளது திமுக - ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
தமிழ்நாட்டை ஐந்து ஆண்டில் ஒட்டுமொத்தமாக சீரழித்துள்ளது திமுக - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 96-வது வார்டில் உள்ள ரெயில்வே காலனி, எம்.டி.ஹெச் ரோடு, கரிமேடு, திரு நகர் மற்றும் லக்ஷ்மிபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். தொடர்ந்து, இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.

சென்னை உட்படத் தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது, இதனால் பெண்கள் பாதுகாப்பற்ற பதற்றத்திலேயே வாழ்வது, தாய்மார்கள் குடும்ப வன்முறைகளை எதிர்கொள்வது எனத் தமிழ்நாட்டை ஐந்து ஆண்டில் ஒட்டுமொத்தமாகச் சீரழித்துள்ளது திமுக ஆட்சி.

"போதையில்லா தமிழ்நாடு, பெண்களுக்குப் பாதுகாப்பான முன்னேற்றம், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, தாய்மார்களுக்கான மதிப்புமிகு திட்டங்கள்" என மக்களின் சிறந்த எதிர்காலத்திற்கான திட்டங்களைக் கொண்டிருக்கிறது நமது தேர்தல் அறிக்கை. வெற்றித் தலைவர் வென்று தமிழ்நாட்டைத் தலைசிறக்கச் செய்வார்.

'வில்லிவாக்கம் மக்கள் இனி துன்பப்படத் தேவையில்லை. நமது அனைத்து தேவைகளும் கனவும் நிறைவேறும் காலம் வந்துவிட்டது' என்று தொகுதியின் வெற்றி வேட்பாளராக என் வில்லிவாக்கம் குடும்பத்திற்கு வாக்குறுதி அளித்தேன்.

விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!

நம்மால் முடியும்!!!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com