

சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கோ, வி.சி.க.வுக்கோ, கம்யூனிஸ்டுகளுக்கோ, ஐ.யூ.எம்.எல். கட்சிக்கோ ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் வாக்கு செலுத்தியது த.வெ.க.வுக்குதான். விஜய்யை மட்டும்தான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று த.வெ.க.வினர் மட்டும்தான் சொல்ல முடியும். த.வெ.க.வுடன் கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு, தி.மு.க.வின் தயவால்தான் வெற்றி பெற்றார்கள். தற்போது அணி மாறிவிட்டார்கள் அவ்வளவுதான். அப்படி இருக்கும்போது வீரவசனம் பேசுவதில் அர்த்தமில்லை. எனவே கூட்டணி கட்சிகள் அடக்கி வாசிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.