வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபரை தாக்கியவர் கைது
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நரியங்குழி தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 69). தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் காமராஜ் (60), சந்திரசேகர்(50). உறவினர்களான இவர்களுக்கு இடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று உல்லியக்குடியில் வேலாயுதம் விவசாயம் செய்யும் இடத்தில், அவரது மகன் ரமேஷ்(36) மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த காமராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ரமேஷிடம், ஏன் எங்களுக்கு சொந்தமான இடத்தில் மாடு மேய்கிறாய் என்று கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தார். சந்திரசேகரை தேடி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com