வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

களக்காடு அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மதன் (24). இவர் சம்பவத்தன்று களக்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த முருகேஷ் (36) என்பவர் பொதுஇடத்தில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தார். இதைப்பார்த்த மதன் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ், மதனை கல்லை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசை கைது செய்தனர். இவா நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com