கஞ்சா வைத்திருந்தவர் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
Published on

நெல்லை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நெல்லை அருகே வி.எம்.சத்திரம் வ.உ.சி. நகர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றார். மற்றொருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி சென்னல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முத்துபாண்டி (வயது 30) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 500, செல்போன், 2 கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற தூத்துக்குடி வசவப்பப்புரத்தை சேர்ந்த வேம்புராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com