மக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம் என்ற பகல் கனவு இனி பலிக்காது - ஆதவ் அர்ஜுனா

நம்மை மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டார்கள் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
 மக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம் என்ற பகல் கனவு இனி பலிக்காது - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று மாலை வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஐசிஎப் (ICF) காலனி, முளகாளியம்மன் கோவில் - பாளயகாரத் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். தொடர்ந்து, இரவு நடைபெற்ற தெருமுனை பிரசார பொதுக்கூட்டதில் பங்கேற்றோம்.

ஓட்டுக்கு எட்டாயிரம், பத்தாயிரம் என்று பணம் கொடுத்து மக்களின் மதிப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் அதிகார கட்சியினர். 'மக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம்' என்ற பகல் கனவு இனி ஒருபோதும் பலிக்காது.

பணத்தைத் தாண்டி மக்களின் மனதை, பேரத்தைக் கடந்து மக்களின் எண்ணத்தை, அரசியல் கணக்குகளை மீறி மக்கள் மீதான அக்கறையைக் கொண்டுள்ள நம்மை மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டார்கள்.

வில்லிவாக்கம் தொகுதி தாய்மார்களும், அக்கா, தங்கைகளும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக அரவணைக்கும் பாசமான உறவு, பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் வராது.

வாக்கைத் தேர்தல் நேரத்து வியாபாரமாகப் பார்க்கும் வாரிசு பண்ணையார்களுக்கு எதிராக, வாக்காளர்கள் அனைவரையும் தனது குடும்பமாகப் பார்த்துவரும் வெற்றித் தலைவரை தமிழக முதல்-அமைச்சராகத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!!

நம்மால் முடியும்!!!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com