2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் பேட்டி

2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் பேட்டி
2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் பேட்டி
Published on

தேனி,

தேனியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சந்திரயான் 5 திட்டம், சந்திரயான் 3 போல் ஒரு லேண்டர். இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டம் 2040ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும். மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இஸ்ரோவின் 3-வது ஏவுதள மையம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 95 சதவீதம் இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்து விட்டது. வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com