விஷம் குடித்த பெண் சாவு

போடி அருகே விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்த பெண் சாவு
Published on

போடி அருகே உள்ள சிலமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சுதி (வயது 22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து சுதி தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுதியின் தந்தை முருகன் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com