பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
Published on

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டு மல்லி உள்பட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனை வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் அமாவாசையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.500-க்கு விற்றது தற்போது ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.100- க்கு விற்றது ரூ.170-க்கும், அரளி ரூ.100-க்கு விற்றது ரூ.150-க்கும், ரோஜா ரூ.120-க்கு விற்றது ரூ.200-க்கும், முல்லை ரூ.500-க்கு விற்றது ரூ.800-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கு விற்றது ரூ.200-க்கும் கனகாம்பரம் ரூ.800-க்கு விற்றது ரூ.ஆயிரத்திற்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com