தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாகவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கன்னியாகுமரி,

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் ஊட்டி, பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

பண்டிகை நாட்களில் இங்கு பூக்கள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாகவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளை (24-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையா கவும் வாங்குவதற்கு ஏராளமானோர் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் பூக்களின் விற்பனை அதிகரிப்பால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு அதன் விலை வருமாறு:- பிச்சி ரூ.1400, மல்லிகை ரூ.900, முல்லை ரூ.1250, சேலம் அரளி ரூ.250, சம்மங்கி ரூ.100, பட்டர் ரோஸ் ரூ.180, மஞ்சள் மற்றும் சிகப்பு கேந்தி ரூ,60, கொழுந்து ரூ.110, மரிக்கொழுந்து ரூ.120, துளசி ரூ.35.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com