தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700-க்கு விற்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com