சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்தது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக தங்கத்தின் விலை கண்ணாமூச்சு காட்டி வருகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், இன்று ரூ.80 குறைந்து ரூ.45,120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ.5,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு20 காசுகள் உயர்ந்து ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com