

சென்னை,
தவெக அரசை கண்டித்து அதிமுக அறிவித்த ஆர்ப்பாட்டம் டிச.3-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;
“தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு! கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம் பாலியல் வன்கொடுமைகள் என, சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை! மேகதாது பிரச்சனையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது!
மக்கள் பிரச்சனைகளைத் நீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் அரசைக் கண்டித்து கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகங்களின் 2.12.2026 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு 3.12.2026 வியாழக் கிழமை அன்று காலை 10 மணியாயில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழக அமைப்பு சிறியான மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்கௌவே அறிவித்த நிர்வாகிகளே, தலைமையேற்று நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். கட்சி பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னான் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.