ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

பாளையங்கோட்டை அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.
ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

சிவந்திபட்டி:

பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டி கொடிகுளம் சுடலை கோவில் அருகே நேற்று ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த பாம்பு, ஒரு ஆட்டை பிடித்து விழுங்கியது.

இதைக்கண்ட பொதுமக்கள் பாம்பை பிடித்து சிவந்திபட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவுப்படி, உதவி வன பாதுகாவலர் ஷானவாஸ் மேற்பார்வையில், உயிரியியலாளர் கந்தசாமி, வன கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, வேட்டை தடுப்பு காவலர் சுடலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

12 நீளம் கொண்ட அந்த பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை பாபநாசம் அடர்ந்த மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com