தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக பாடுபட்டு வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னையில் நடைபெற்ற ரம்ஜான் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுபேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் 2-ஆம் இடத்திற்குதான் போட்டி உள்ளது. முதலிடத்தில் திமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி போனதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குங்கள் என்றனர் அதிமுகவினர்.

அந்த அளவிற்கு அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக பாடுபட்டு வருகிறது. இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு எதிராக எது நடந்தாலும் முதலில் கொடுப்பது திமுகதான். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com