மணல் அள்ளியவர் சிக்கினார்: டிராக்டர் பறிமுதல்

வீரபாண்டி அருகே மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர்.
மணல் அள்ளியவர் சிக்கினார்: டிராக்டர் பறிமுதல்
Published on

வீரபாண்டி அருகே பூமலைக்குண்டு பகுதியில் ஓடையில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பூமலைக்குண்டு கவுல்காடு ஓடையில் டிராக்டரில் ஒருவா மணல் அள்ளி கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், பூமலைக்குண்டு வடக்கு தெருவை சேர்ந்த ராமராஜன் (வயது 57) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டா பறிமுதல் செய்யப்பட்டது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com