ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்

தமிழக மீனவர்களை ஐந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைகள் வரவிடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைக்குள் வரவிடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்
Published on

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கச்சத்திவைத் தாண்டி சென்ற போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இவர்களை இலங்கை எல்லைக்குள் வரவிடாமல் பகல் நேரங்களில் விரட்டியடித்தனர்.

மீண்டும் மாலைப் பொழுதில் தனுஷ்கோடி பகுதியில் இருந்து மன்னார் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழக மீனவர்களை ஐந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைகள் வரவிடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் மீனவர்கள் தங்களை சிறை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீண்டும் இந்தியா எல்லைக்குள் வந்து மீன்பிடித்தனர். இதனால் பெரும் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com