செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி மாயம்

செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி மாயமானார்.
செல்போனில் பேசியதை கண்டித்ததால் மாணவி மாயம்
Published on

ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி பகுதியில் 15 வயது சிறுமி தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதனால் அவரது பாட்டி கண்டித்துள்ளார்.

இதனால் சிறுமி கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com