ஆசிரியர் சாவு

விபத்தில் காயமடைந்த ஆசிரியர் சாவு
ஆசிரியர் சாவு
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே அருளாட்சி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் சமுத்திரவேலு (வயது 42). இவர் தென்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று வாசுதேவநல்லூர்- ராஜபாளையம் ரோடு சிந்தாமணிபேரிபுதூர் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சமுத்திரவேலுவுக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சமுத்திரவேலு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com