வாலிபருக்கு கத்திக்குத்து

திண்டுக்கல் அருகே, வாலிபரை கத்தியால் குத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 25). எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இரவு இவர், அங்குள்ள முத்தாலம்மன் காவில் அருகே நடந்து வந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல், திடீரென அவரை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் நிலைகுலைந்து விஜய் கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரனையில் முன்விரோதம் காரணமாக சந்துரு நகரை சேர்ந்த தாமரை (20), கக்கன் நகரை சேர்ந்த மைனா என்ற ரமேஷ்குமார் (22), சங்கரபாண்டி (21), செல்வக்குமார் (22), அனுமந்தநகரை சேர்ந்த மணிபாரதி (22) ஆகிய 5 பேரும் சேர்ந்து விஜயை கத்தியால் குத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து தோமையார்புரம் பிரிவு அருகே பதுங்கி இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com