வாலிபருக்கு கத்திக்குத்து

வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள அற்பிசம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி மகன் வல்லரசு (வயது 22). அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (28) என்பவர், வல்லரசுவின் பாட்டி பச்சையம்மாளின் (73) வீட்டின் மீது பட்டாசு கொளுத்தி போட்டுள்ளார். இதை வல்லரசு தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணபெருமாள், அவரது நண்பர்களான வளவனூர் தொட்டி பகுதியை சேர்ந்த தமிழரசன், குறளரசன், வேலு ஆகியோர் சேர்ந்து வல்லரசுவை திட்டி சிறிய கத்தியால் இடதுபுற முதுகில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வல்லரசு, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கிருஷ்ணபெருமாள் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com