திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது - அன்புமணி

அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது - அன்புமணி
Published on

ஆரணி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- நாம் அனைவரும் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடித்த இந்த கேடுகெட்ட திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதரிகளும், தாய்மார்களும், பெற்றோர்களும் தங்களின் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒன்றாக இணைந்து அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசுதாவை வெற்றி பெற வைக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு திருட்டு கும்பல் உள்ளது. அந்த திருட்டு கும்பலின் தலைவன் எ.வ.வேலு என்பது அனைவருக்கும் தெரியும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறந்தவர் இங்கு பிழைப்பதற்காக இந்த மாவட்டத்திற்கு வந்தார். முதலில் அதிமுகவில் இருந்துவிட்டு இப்போது திமுகவில் உள்ளார். தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நிறைய துரோகங்களை அவர் செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com