பெருமாள் தீயனூர் ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

பெருமாள் தீயனூர் ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருமாள் தீயனூர் ஓடையில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
Published on

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள பெருமாள்தீயனூர் ஓடையில் டிராக்டரில் ஒருவர் மணல் அள்ளிக்கொண்டிருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதனைதொடர்ந்து போலீசார் அந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com