காதலி இறந்த சோகம்..மதுவுக்கு அடிமையான வாலிபர்... அடுத்து நடந்த விபரீதம்

கடந்த 1 மாதத்துக்கு முன்பு வாலிபரின் காதலி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தெரிகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநித்தியானந்த். இவருடைய மனைவி மேழ்சிதரமணி. இவர்களுடைய மகன் விவேகானந்த் (வயது 24). கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மேழ்சிதரமணி கணவரை பிரிந்து சொந்த ஊரான குலசேகரம் அருகே உள்ள மங்கலம் நெடியால்விளையில் வசித்து வருகிறார். தற்போது அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் விவேகானந்த் தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விவேகானந்த் தாயாரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் அவருடனேயே தங்கியிருந்தார். ஆனால் அவர் வந்த நாள்முதல் மிகுந்த சோகத்துடனேயே இருந்து வந்துள்ளார். இதுபற்றி மகனிடம் மேழ்சிதரமணி என்னவென்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் கடந்த 1 மாதத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என கதறி அழுதுள்ளார். மேலும் மன வருத்தத்தில் இருந்த அவர் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விவேகானந்த் வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com