எலிக்காக வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு பெண் பலி

செங்குன்றம் அருகே எலிக்காக வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
எலிக்காக வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு பெண் பலி
Published on

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகள் சில்வன மேரி (வயது 23).

இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் எலித் தொல்லை தாங்காமல் இருந்ததால் எலிகளுக்கு எலி மருந்து கலந்த சாப்பாட்டை எடுத்து வைத்துள்ளனர்.

இந்த சாப்பாட்டை தவறுதலாக எடுத்து சாப்பிட்ட சில்வன மேரிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.உடனே அவரை பாடியநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

எலிக்காக வத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com