விபத்தில் தொழிலாளி பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
விபத்தில் தொழிலாளி பலி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பரமன் (வயது 65). தொழிலாளியான இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பாதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com