விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலியானார்.
விபத்தில் தொழிலாளி பலி
Published on

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ளமணலூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தவமணி (வயது 57). இவர் சம்பவத்தன்று மணலூர் காலனி அருகே ரோட்டை கடக்க முயன்றபோது, அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (37) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக தவமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தவமணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். காயம் அடைந்த கார்த்திக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com