விபத்தில் தொழிலாளி பலி

பள்ளிபாளையத்தில் விபத்தில் தொழிலாளி இறந்தார்.
விபத்தில் தொழிலாளி பலி
Published on

பள்ளிபாளையம்

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் மாசாணம் (வயது 30). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் உசிலம்பட்டியில் இருந்து மோடமங்கலத்தில் உள்ள சோழா மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் மாசாணம் மோட்டார் சைக்கிளில் வெப்படை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேட்டுக்கடை அருகே வந்த மினி பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாசாணம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com