சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி.. போன் நம்பர் கேட்டும் தொந்தரவு

சிறுமியின் தொலைபேசி எண்ணை கேட்டும், தன்னிடம் பேசுமாறு தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி.. போன் நம்பர் கேட்டும் தொந்தரவு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 51). தொழிலாளியான இவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பேசி பழகியுள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, தொலைபேசி எண்ணை கேட்டும், தன்னிடம் பேச வேண்டும் எனவும் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சாதிக் பாட்ஷாவை போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com