சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்

சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயமடைந்தார்.
சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்
Published on

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதா (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி திருவள்ளூரில் கட்டிட வேலையை முடித்து விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாச்சூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது திருவள்ளூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் ராதா மீது மோதியது. இதில் இவருக்கு தலை மற்றும் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ராதாவின் மகன் நவீன் குமார் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com