அரிசி ஆலையில் திருடிய வாலிபர் கைது

பாவூர்சத்திரம் அருகே அரிசி ஆலையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரிசி ஆலையில் திருடிய வாலிபர் கைது
Published on

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரை சேர்ந்தவர் வெண்ணி நாடார் (வயது 65). இவருக்கு சொந்தமான அரிசி ஆலை கீழப்பாவூர் ஊருணி அருகில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அவர் ஆலையை பூட்டிச் சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, ஆலையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில் அங்கிருந்த ரூ.1.29 லட்சம் மதிப்பிலான மோட்டார் மற்றும் மின்சாதன பொருட்களை மர்மநபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கீழப்பாவூரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அருண்குமார் (29) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திருடிய பொருட்களையும் மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com