

சென்னை,
அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளான 3.8.2026 - திங்கட்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்திருக்கும் தீரன் சின்னமலையுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கும்; அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எஸ்.பி. வேலுமணி, கழக அமைப்புச் செயலாளர் கே.சி. கருப்பணன், சின்னசாமி செல்வராஜ், செ.ம. வேலுசாமி, செ. தாமோதரன், பி.சி. ராமசாமி, ஹரிபாஸ்கர், கே.சி. பழனிச்சாமி, வி.பி.சிவசுப்பிரமணி, ஆர்.மனோகரன், கே. கமலக்கண்ணன், கே.எஸ். தென்னரசு, எஸ். செல்வகுமார சின்னையன், ஆர்.என். கிட்டுசாமி, எஸ். பாலகிருஷ்ணன், ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள்; அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பி. தங்கமணி, வெ. சரோஜா, ஆர். இளங்கோவன், எஸ். வெற்றிவேல், கே.பி.பி. பாஸ்கர் ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.