செல்போன் கடையில் திருட்டு

வளவனூரில் செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனா.
செல்போன் கடையில் திருட்டு
Published on

விழுப்புரம்:

வளவனூர் அருகே உள்ள அற்பிசம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தயாளன் மகன் திலகராஜ் (வயது 30). இவர் வளவனூர் பஸ் நிறுத்தம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான கடையில் கடந்த 5 வருடமாக செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று  இரவு விற்பனை முடிந்ததும் திலகராஜ், தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த சூழலில் இன்று காலை 6 மணியளவில் இவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்து, திலகராஜிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர், தனது கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையினுள் இருந்த 35 பழைய செல்போன்கள் மற்றும் 10 பவர் பேங்குகள் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேற்கண்ட பொருட்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்து திலகராஜ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com