லாரியில் 100 லிட்டர் டீசல் திருட்டு

நெல்லை அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியில் 100 லிட்டர் டீசலை மர்மநபர் திருடி சென்றார்.
லாரியில் 100 லிட்டர் டீசல் திருட்டு
Published on

திருச்சி ஸ்ரீஜீவன்நகரை சேர்ந்தவர் சுந்தர். லாரி டிரைவரான இவர் சேலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு லாரியில் சென்றார். அப்போது நெல்லை அருகே கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் அந்த லாரியின் டீசல் டேங்கை உடைத்து அதில் இருந்த 100 லிட்டர் டீசலை திருடி சென்றார். இதுகுறித்து சுந்தர் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com