தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு

தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
Published on

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமலைநாதன் (வயது 60). இவர், நேற்று மாலை ராஜகீழ்பாக்கத்தில் உள்ள வங்கியில் ரூ.80 ஆயிரத்தை எடுத்துகொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தில் பணப்பையை வைத்துவிட்டு சலவைசெய்யும் கடையில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், முதியவரிடம் சாலையில் ரூ.10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் கிடக்கிறது. அது உங்களுடையதா? என்று கேட்டு திருமலைநாதன் கவனத்தை திசை திருப்பினர்.

உடனே அவர் திரும்பி பார்க்கவும், மர்மநபர்கள் திருமலைநாதன் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் இருந்த பணப்பையை திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர், சேலையூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை செய்தனர். அதில் மர்மநபர்களே சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசி, முதியவரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com