தேனி: பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் காட்டுத்தீ.. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்

காட்டுத்தீயால், அங்கு வசிக்கும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தேனி: பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் காட்டுத்தீ.. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது பலத்த காற்று வீசியதால், தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியது. நேற்று காலை தொடங் கிய காட்டுத்தீ இரவு வரை கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் ஏராளமான அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. மேலும், அப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருவதால், வனப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com