தேனி: மாணவர்களுக்கான உதவித்தொகை மோசடி- 12 பேருக்கு ஓராண்டு சிறை

தேனியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதில் போலி சான்றிதழ்கள் மூலம் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகை மோசடி தொடர்பான வழக்கில் 12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மாணவர்களுக்கான உதவித்தொகையில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி

தேனி மாவட்டத்தில் கடந்த 1989 முதல் 1992 வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதில் போலி சான்றிதழ்கள் மூலம் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

12 பேர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பான வழக்கில் அப்போதைய வருவாய் ஆய்வாளர் சுருளிராஜ், போடிநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜன், விவேகானந்தன், ஆசிரியை அமராவதி உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

12 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் 12 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாரதிராஜா தீர்ப்பளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com