வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை- சத்ய பிரதா சாகு

வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை- சத்ய பிரதா சாகு
Published on

சென்னை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியதாவது:-

மே 2ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் என்று வெளியான தகவல் உண்மை இல்லை. வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை.

மே 1ந் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com