கே.என்.நேரு மீதான வழக்குப்பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன்

இந்தியா கூட்டணி சிதறி விடக்கூடாது என்று திருமாவளவன் கூறினார்.
கே.என்.நேரு மீதான வழக்குப்பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன்
Published on

திண்டிவனம்,

திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விசிக வெற்றிக்கு உதவிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து தற்போது கருத்து சொல்ல இயலாது. சமூகநீதி குறித்து இதுவரை பேசவில்லை; இடதுசாரிகள் கருத்தே என் கருத்து. ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக, பெரும்பான்மை கிடைக்காத தவெகவை ஆதரித்தோம்.

தவெக ஆட்சியை விமர்சிக்காமல் இருக்க 6 மாத காலம் அமைதியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட தவெக அரசு எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது. இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும். இந்தியா கூட்டணி சிதறி விடக்கூடாது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com