கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் ‘நீட்’ ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது - கனிமொழி எம்.பி.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. தொடர்ந்து முன்வைத்து வருவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் ‘நீட்’ ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது - கனிமொழி எம்.பி.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்ற பிம்பத்தை பரப்பக்கூடிய சூழலில், இந்தியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை கையில் எடுத்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அடுத்ததாக மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். தி.மு.க. தொடர்ந்து முன்வைக்கக்கூடிய கோரிக்கையும் அதுவே. மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வந்தால் நிச்சயமாக ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com