நெல் குடோன் தீப்பற்றி எரிந்ததாக பரபரப்பு

நெல் குடோன் தீப்பற்றி எரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
நெல் குடோன் தீப்பற்றி எரிந்ததாக பரபரப்பு
Published on

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூரில் நெல் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குடோனுக்கு எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை குப்பைக்கு மர்ம நபர் தீ வைத்து கொளுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குப்பை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் நெல் குடோன் தீப்பற்றி எரிந்ததாக தவறான தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, குப்பையை கொளுத்தி சென்ற மர்ம நபரை தடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com