எல்லா பிரச்சினைக்கும் முடிவு உள்ளது: ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை: ராமதாஸ்

பாமகவில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
எல்லா பிரச்சினைக்கும் முடிவு உள்ளது: ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை: ராமதாஸ்
Published on

 விழுப்புரம்,

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு உள்ளது. ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை. கலைஞர் பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி ராமதாஸ் இருக்க வேண்டும். சமரச பேச்சுவர்த்தை நடந்து கொண்டே இருக்கிறது.

பாமகவை வளர்த்தது நான்.மூச்சிருக்கும் வரை கட்சி தலைவராக இருப்பேன். குரு மூர்த்தியுடன் பேசுகிறோம். பேசிக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. எனது 60-வது திருமண நாள் நிகழ்ச்சிக்கு அன்புமணி வராதது வருத்தம் அளிக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும். செயல் தலைவர் என்பது சிறந்த பொறுப்பு அதை அன்புமணி ஏற்க மாட்டேன் என்கிறார். " என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com