'போக்குவரத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை' - அமைச்சர் சிவசங்கர்

அரசு போக்குவரத்து கழகத்திற்கு 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
'போக்குவரத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை' - அமைச்சர் சிவசங்கர்
Published on

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தர பணியாளர்களை பணிக்கு எடுத்தப்பின் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய ஓட்டுநர், நடத்துநர்களை சேர்ப்பதற்கு முதல்-அமைச்சர் அனுமதியோடு அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், இதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com