திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல இருந்த விமானத்தில் கோளாறு

திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
Published on

திருச்சி,

திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று காலை 74 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் அமர வைக்கப்பட்டனர். அந்த விமானத்தின் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இருந்தது.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் தவித்தனர்.

இதையடுத்து மாற்று விமானம் மூலமாக செல்ல விரும்பும் பயணிகள் செல்லலாம் என்றும், அவ்வாறு செல்ல விருப்பமில்லாத பயணிகள் டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் என்றும் விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் சில பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். மற்ற பயணிகள் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மாற்று விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com